கத்திடா


கத்தியில இருக்கும் நல்ல விஷயங்களை புகழ்ந்தாச்சு, சில விஷயங்களை கலாய்ச்சும் விட்டாச்சு... எந்திரனின் வசூல் சாதனையை முந்திடுச்சுன்னு சொல்றாங்க, அதுக்கும் வாழ்த்துக்கள்... இருந்தாலும் நாங்க கலாய்ப்போம்ல ;-) ;-) ;-)
***************************

வணக்கம், இன்னிக்கு நாம பேட்டி எடுக்க போறது, இந்தியாவுலையே, ஏன் உலகத்துலையே, ஏன் விண்வெளியிலையே பெரிய விஜய் fanனான 'சுறா' சங்கர. வணக்கங்கய்யா.

வணக்கம் தம்பி..

எல்லா ரசிகர்களும், ஒவ்வொரு படம் ரிலீஸாகறப்பவும் படம் சூப்பரா இருக்கும்னு தான் போறாங்க, ஆனா சில சமயம் மிஞ்சுறது என்னவோ ஏமாற்றம் தான், இது நம்ம விஜய் சார் படத்துலயும் இருக்கு, இதுக்கு காரணம் என்னங்கய்யா?

என்ன சொல்றீங்க நீங்க? டிவில மக்கள் வாரம் ஒரு தடவை திருப்பாச்சி, வருஷம் ஒரு தடவ சிவகாசின்னு பார்க்கிறாங்க. கில்லியும் போக்கிரியும் எப்ப ரிலீசானாலும் கூட்டம் ரொம்ப அள்ளுது. திருமலை பார்க்கிறாங்க, துப்பாக்கி பார்க்கிறாங்க. இவ்வளவு ஏன் ப்ளாக்ல கூட பட டிக்கெட் விலை ஏறியிருக்கு. கடந்த 10 வருஷத்துல எந்த படமாவது ஒரு நாளைக்கு கம்மியா ஓடியிருக்கா சொல்லுங்க?

அய்யா, எந்த வி.கே.ராமசாமி ரசிகரும், விஜயசாந்தி ரசிகரும் விஜய் பட டிக்கெட்டுக்காக கியூல நிக்கிறது இல்ல. விஜய் சார் ரசிகர்கள் தான் மொத மூணு ஷோவும் பார்க்கிறாங்க. விஜய் ரசிகர்கள் மேலும் விஜய் ரசிகர்கள் ஆகுறாங்க; விஜய் வெறியர்கள் மேலும் விஜய் வெறியர்கள் ஆகுறாங்க. அது மொக்க படமா இருந்தாலும் மணிக்கணக்குல அவங்களே கியூல நிக்கிறாங்க. மொத்த டிக்கெட்டும் அவங்களே வாங்கிட்டு போயிடுறாங்க.

குத்தம் சொல்றவன் சொல்லிக்கிட்டே தான் இருப்பான். தம்பி, ஜில்லா படம் 3000 கோடி ரூபா வசூல் பண்ணியிருக்குன்னு thatstamil.com சொல்லுது.

அய்யா, ஆனா அது மூணு நாள் தான் ஓடுச்சுன்னு indiaglitz.com சொல்லுதேய்யா.

சுறா படம் செவ்வாய்கிரகத்துல சூப்பர் டூப்பர் ஹிட்ன்னு மங்கள்யான் சொல்லுது.

அய்யா, அது செவ்வாய்கிரகம் போய் சேரவே இன்னொரு வருஷம் ஆகும்ன்னு இஸ்ரோ சொல்லுது.

தலைவா படம் ரிலீஸான மொத நாளே 400 கோடி ரூபா வசூல் பண்ணுச்சு

ஆனா, அது ரிலீசாகவே ஒரு மாசம் ஆச்சேய்யா. வெண்கல பதக்க வாங்குறத விட வெள்ளிக்கிழமை ரிலீசாகறது தானேய்யா முக்கியம்.

துப்பாக்கி படம் ஒவ்வொரு ஊருலயும் 100 நாள் ஓடியிருக்கு

ஆனா குருவி, வில்லு, சுறா, வேலாயுதம், வேட்டைக்காரன் எல்லாமே சேர்ந்தும் 30 நாள் ஓடுலய்யா

தம்பி, புள்ளிவிவரம் சரியா தெரிஞ்சுக்கிட்டு தான் பேசணும்

ஓகே, ஒரு நிமிஷம்ய்யா... அய்யா இது சென்னியார் ரிப்போர்ட், இது அட்டுபிரசாந்த் ரிப்போர்ட், இது என்னோட பிளட் டெஸ்ட் ரிப்போர்ட், இது என்னோட யூரின் டெஸ்ட் ரிப்போர்ட்... இது அய்யா இதுவரைக்கும் உங்க கத்தி படத்த எந்த சேனல் வாங்கியிருக்குன்னு தெரியலையேய்யா. கத்திக்கு மொத நாளே 300 கோடி வசூல்ன்னு சொல்றீங்க, அதுக்கு ஆதாரம் இருக்காய்யா?

அது ஆயிரம் பக்க ரிப்போர்ட்டு தம்பி. மொத பக்கம் ஒரிஜினலு, மிச்ச பக்கமெல்லாம் ஜெராக்ஸு... 15 ரூபா நம்ம மன்றத்துல கட்டி மெம்பர் ஆகனும், அப்ப தான் ஒரு டீ ஒரு வடையோட எல்லாத்தையும் விளக்குவாங்க. அயனாவரத்துல அயர்ன் பண்றவங்கள்ல இருந்து அமெரிக்காவுல டாக்டரா இருக்கிறவங்க வரை இதுல மெம்பரா இருக்காங்க. யார் எது சொன்னாலும் 'துப்பாக்கிடா'ன்னு சொல்லி பழகனும், இதெல்லாம் உனக்கு தெரியாது தம்பி. அடுத்த கேள்வி.

அய்யா, இப்ப நீங்க எங்க வேலை செய்யறீங்க? ஒரு நாளைக்கு எவ்வளவு ப்ரீ டைம் கிடைக்கும்?

நல்லா கேட்டீங்க தம்பி, நான் இப்ப தான் ஆறாவது பாஸாகி ஏழாவது போறேன். சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சா புல்லா ப்ரீ டைம் தான்.

காம்ப்ளான் குடிக்கிறது, ஹோம்வர்க் செய்யறதுன்னு கூட்டி கழிச்சு பார்த்தா, மிச்சம் 1 மணி நேரம் வரும், அவ்வளவு சின்ன நேரத்துல எப்படி எல்லா hashtagகையும் டிரெண்ட் பண்ணுறீங்க? டிவிட்டர்ல மொத்தம் ரசிகர்கள்ன்னு ஒரு லட்சம் பேரு கணக்கு வச்சு இருக்கீங்க, ஆனா டிவிட்டர்ல சுத்துற மொத்த ஐடி 6 லட்சம். அது எப்படி?

இது அபாண்டமான குற்றச்சாட்டு.. வேணும்னா ப்ளாக் பண்ணுங்க, நான் fake id இல்லன்னு தேவிப்பிரியாகிட்ட சொல்லி புரூவ் பண்றேன்.

ப்ளாக்கா? கலாய்ச்சா திருப்பி கலாய்க்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு திட்டுறாங்க, பார்த்தா கத்தி டிபி வச்சிருக்காங்க.

இந்த மொக்க காமெடி ஆர்டிகல மரண காமெடியா மாத்த முயற்சி பண்ணுறீங்களா? உஷ்ஷ்ஷ்ஷ் உஷ்ஷ்ஷ்ஷ்

இது வாயா? இல்ல வேக்கம் கிளீனரா? இப்படி காத்தடிக்கிறீங்க.. ம்ம்ம் சொல்லுங்க...

கேமராவ ஆப் பண்ண சொல்லு... கேமராவ ஆப் பண்ண சொல்லு...

கவலைப்படாதீங்க, இது அட்டுபிரசாந்த் கேமரா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல வேலை செய்யாது..

அப்ப பேட்டி முடிஞ்சததுல்ல? போலாம்ல?

அய்யா பேட்டி இன்னமும் முடில, என் மொபைல் கேமரா ஆன்ல தான் இருக்கு... வாட்ஸ்சப்ல போட வேற ஆடியோ ரிக்கார்ட் ஆயிட்டு இருக்கு... ஹரஹரஹர மஹாதேவகி... சோ ப்ளீஸ் உட்காருங்க.

எங்கள மாதிரி டிபி வச்சுக்கிட்டு, மத்தவங்க fans திட்டுறதை எல்லாம் நான் திட்டுறதா டப்பிங் கொடுக்கறீங்களா?

அந்த ஐடிய கண்டுபிடிச்சு சொன்னதே நான் தான்...

ஓஹோ? எதிர்கட்சிக்காரன் எத்தனை ஆர்டி பண்ணினான்?

நீங்க எதிர்கட்சியா இருந்தப்பா எத்தனை ஆர்டி பண்ணுனீங்க?

ஏன்யா, கைல ஒரு கீபோர்டு, மட்டமான மவுஸு, கேவலமான இன்டர்நெட் கனக்சன்னு வச்சுக்கிட்டு நீங்க மொக்க கேள்வி கேட்பீங்க, நான் பதில் சொல்லனுமா?

விஜய் ரசிகர்ன்னா என்னன்னு தெரியுமாய்யா உனக்கு? என்னைக்காவது விஜய் ரசிகரா டிவிட்டர்ல இருந்து பார்த்திருக்கியா? வந்து பாரு... ஒரு நாளைக்கு எத்தனை பேரு கண்டபடி கலாய்கிறாங்க, எத்தனை பேரு கேவலமா கிண்டலடிக்கிறாங்கன்னு தெரியும். எவ்வளவு சண்டை, எவ்வளவு சமாதானம், எவ்வளவு திட்டு, எவ்வளவு பிட்டுன்னு புரியும்.

ஒரு ஸ்மைலில தீர்க்க வேண்டிய பிரச்னைகள பெருசாக்கிட்டு இப்படி சொல்றீங்களே?

சோறுக்குள்ள பீர விட்டா செமையா இருக்கும்ங்கிறேன், உனக்கு புரில... நீ தின்னு பாரு அப்ப தெரியும்.. ஒரு நாள், ஒரு நாள் நீ விஜய் ரசிகரா இருந்து பாரு அப்ப புரியும்.

இது சரியான பதில் இல்லையே? நான் எப்படிங்க விஜய் ரசிகனா மாற முடியும்?

ஹாஹாஹா, என்ன பயப்படுறியா?

அது இல்லீங்க, அதுக்கு வினுசக்கரவர்த்தி ரசிகனா இருந்துட்டு போவேனே...

( ஜஸ்ட் கலாய்க்க மட்டுமே எழுதினேன், சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வராதீங்க, நீங்களும் கலாய்ச்சிக்கோங்க...)

Reply · Report Post