dagalti

dagalti · @dagalti

30th Apr 2013 from TwitLonger

.@nom_d_plum @sicmafia @nchokkan @tekvijay

நான் நட்டநடு mainstreamல மட்டும் தான் குளிப்பேன்னு படுத்திகிட்டு இருந்தவன் தான். நீங்க எல்லாம் அஜந்தா, வால்மீகி, உளியின் ஓசை, மத்திய சென்னை, பொன்னர் சங்கர் எல்லாம் விழுந்தடிச்சு கேட்டு சிலபலர் சிலாகிக்கும்போது தலையை சொரிஞ்சிக்குவேன். திரைப்பாடல் 90கள் அளவுக்கு எதுவுமே நமக்குப் புடிக்காது போலன்னு முடிவு பண்ற கட்டத்துல இருந்தேன்.

ரெண்டொரு தடவை மேற்சொன்ன படப்பாட்டுகளை கேட்டிருக்கேன். கேட்டுட்டு வாரணம் ஆயிரம் கேக்கப் போயிருவேன். Yeah judge me.

தோனி வந்தப்பா நிகழ்ச்சி, பிரகாஷ்ராஜ் வழிசல் எல்லாம் நடந்துச்சு. வந்த உடனே கேட்டேன். ஓரளவு பரால்லாம இருக்கு, இத்தப் போய் ஆஹா ஊஹூ 'ன்றாங்களே-ன்னு நினைச்சேன். ரொம்ப ஆழமா ரசிக்கிறவங்களுக்குத் தான் புடிக்கும் போல'ன்னு விட்டுட்டேன்.

NEPV வந்தப்பா சத்தம் படுபயங்கரமா இருந்துச்சு. ரொம்ப நாள் கேக்காமயே இருந்தேன். ஹொஸான்னாக்கள் ஓயட்டும். பைய்ய கேட்டுக்குவோம்'னு. ஓஞ்சபாடில்லை. சரி'ன்னு கேட்டேன். தோனியை விட கொஞ்சம் நல்லா இருந்துச்சு அவ்வளவு தான். இதுக்கு ஏன் இப்படி சொல்றாங்க. இது ஹிட்டாகியே தீரணும்'னு நினைக்குறாங்க போல'ன்னு நினைச்சேன்.

அப்புறமும் பார்த்தா, வலைல எங்கும் NEPV எதிலும் NEPV. வழக்கத்தை விட சத்தம் பிரம்மாண்டமா இருக்கே'ன்னு ஒரு சில தடவை கேட்டேன். அப்பொல்லாம் எப்படி கேக்குறதுன்னா: skip Yuvan and சற்றுமுன்பு. Repeat at புடிக்கல மாமு.

I'd love to say there was some dramatic milestone event that got me hooked. But it is the cliched 'gradual'.

Without exaggeration it is a phenomenal album - a towering achievement in recent times.

அருள்செல்வன் இதை முன்சைச்சு (தான்'னு நினைக்கிறேன்) ஒரு கந்தர் அனுபூதி வரியை சொல்லி இருந்தார்

அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே

--------------------

அப்பொ எனக்கு அது ரொம்ப மிகையா தோணிச்சு. ஒவ்வொரு பாட்டையும் சிலாகிச்சு எழுதப்பட்ட இடுகைகள் எல்லாம் மிகையா தோணிச்சு.

அப்புறம் அதையெல்லாம் தேடித்துழாவிப் படிச்சேன். அந்த அனுபவத்தை உவகையோட வெளிப்படுத்தியிருக்காங்க. கிட்டத்தட்ட புதுசா, சுரேஷ் மாதிரி உள்ளவங்க எழுதாத எதையுமே நான் அனுபவிக்கலை. ஆனா அதெல்லாம் ex-post தான் துலங்கிச்சு.

யுவன் எல்லாம் எனக்கு பல வருஷ பகை. யுவன் பாட்டையெல்லாம் ரசிக்க வைச்சது எல்லாம் 'எங்க நீ கூட்டிப்போற' moment. என் ரசனைவாழ்வில் ஒரு milestone event :D

ஆல்பம் அலைக்கழிச்சிருச்சு'ன்னே சொல்லலாம். Next only to திருவாசகம், in terms of number of listens.

வெளிய வரணும்ங்கிறதுக்காகவேண்டியே கேட்டது தோனி. நிச்சயம் சுமாரா இருக்க வேண்டியது law of averagesன் கட்டாயம்னு. கடைசில பார்த்தா, இந்த வருஷத்துல வந்து சிக்கிருச்சே'ன்னு பரிதாபப்பட வைக்கிற அளவுக்கு பிரமாதமா இருந்துச்சு. 'வாங்கும் பணத்துக்கும்' பாட்டையெல்லாம் 'சுமார்'னு நினைச்சதை நானே சிரிச்சுக்குவேன்.

நிற்க...இவ்வளவு எதுக்கு நீட்டி முழக்குறேன்னா... இந்தப்பக்கம் வந்தா, 'வெளியிலேர்ந்து' பார்க்குறவங்களோட (கேக்குறவங்க?) 'அதிசய'ப் பார்வையை உணரமுடியுது.

கவனமான ரசிகர்கள்னு சொல்ல முடியாத அனேகர், என் கார்ல உள்ள perma-soundtrackகை என்னளவு ரசிக்கலைன்னு நல்லா தெரிஞ்சுது. அவங்க ரசனைல இடி விழ'ன்னு எல்லாம் நான் சொல்லமாட்டேன் - மனசுல நினைச்சுக்கறதோட சரி.

ஒரு நெடும்பயணத்துல, செங்கல்பட்டு வரைக்கும் தாக்குபுடிச்சிட்டு, 'இத மாத்தப்போறியா என்னங்க்ற நீயி'ன்னு வீட்டு கிட்டதூர பெரியவங்க வற்புறுத்த, 80-90 கமல்-ராஜ ஹிட்ஸ் போட்டு - 'இந்த மாதிரி நல்லா பாட்டுல்லாம் இப்பொ போடுறதில்லை'யையும் கேட்டுகிட்டேன்.

பொதுவா, ஆஃபீலயும் ஒரு சில யூஷுவல் சஸ்பெக்ட்ஸ் தான் கேட்டிருக்காங்க. அவங்களும் நல்லா (என்னளவு (கூட)) ரசிச்சதாத் தோணலை.

என்னளவுல இந்த ஆல்பம் பிரம்மாண்டத்துக்கு ரசிச்சு சிலாகிக்கப்பட்டிருக்கணும். இதெல்லாம் போதவே போதாது.

NEPV படம்/ஆல்பம் வர்றதுக்கு முன்னாடி என்னோட மனநிலை எனக்குத் தெரியும். 'எனக்கும் கீழே உள்ளவர் கோடி'. அவங்களுக்கு இளையராஜா கடைசியா பண்ண படம் பிதாமகன், அதுல ஒரேயொரு பாட்டு 'இளங்காத்து வீசுதே'. அப்படியாபட்டவங்க கௌதம் தேர்வு செஞ்சது ஏதோ 'மீட்டெடுப்பு'ன்னு நினைக்கிறது புரிஞ்சுக்கக் கூடியது தான்'னு நினைக்கிறேன்.

அந்த narrativeஐ challenge பண்ணுறதும் முக்கியம். இல்லைங்கல.

ஆனா பொது அறிவின் நிலை அதான். அதுக்கெல்லாம் இன்சல்ட்'னு ரொம்ப பொங்க வேண்டாம்.

என்பெலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருக மாட்டா

'ன்னு விட்ருங்க.

பி.கு: அஜந்தா வகையறால்லாம் இன்னும் பிடிக்கலை தான். பிடிக்குது பிடிக்கலை'ன்றது வேற. ஆனா நீஎபொவ -வேற தளத்துல இருக்கு. அதை போதுமான அளவு அங்கீகரிக்காம பேசுனா - எவ்வளவு தீவிரமான, நுட்பமான ராஜாரசிகரா இருந்தாலும் - நான் கொஞ்சம் சந்தேகத்தோடயே பார்ப்பேன் - என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் :-)

Reply · Report Post