aravindmano

AM. · @aravindmano

11th Mar 2012 from Twitlonger

"உன் துன்பம் என்பது வரவு” is the line that caught my attention this evening and pulled me to the soundtrack of Uyire. It's hidden somewhere in சந்தோஷக்கண்ணீரே. It hangs there without any further explanation. Yet I couldn't discard it as fillers. Vairamuthu's lines are rich, picturesque, abstract and evocative beautifully highlighting the terrific film and the score.

மேடையிலே அவர் ஏறி நின்று கம்பீரமாக ஒரு விரலை ஆணித்தரமாக அசைத்து அசைத்து பெருமையுடன் சொல்லக்கூடிய வரிகள் பல உண்டு என்றாலும் (கல்லொன்று தடை செய்த போதும் / புல்லொன்று புது வேர்கள் போடும்), கவர்பவை பிற ஏராளமான சொல்லாடல்கள்.

இரு பூக்கள் கிளை மேலே / ஒரு புயலோ மலை மேலே / உயிராடும் திகிலாலே could be the best way to open that song. அந்த அபத்திரம், அபாயம். You also get a lovely ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா in a song that is no way connected to the story, இருந்தும் காட்சி அழகு.

ஒரு தண்டவாள ரயில் / பாடிப்போன குயில் gets both the meter and the imagination right but still he enhances the scene with பாடிப்போன குரல் கரைவதில்லை / அது பாடிப் போன குரல் கரைவதில்லை. ’என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்’ என்பதில் சொல்லப்படுகிற பெருமையும் சரணடைதலும். அழகின் கதகதப்பை வார்த்தையில் கொண்டு வருவது.

ஓரப்பார்வை வீசுவான் / உயிரின் கயிறில் அவிழ்குமே என்பதில் இருக்கிற சுவாரசிய முடிச்சு. அல்லது தேகத்தங்கம் என்ற உருவ உருவகம். The colourful சிவந்ததே என் மஞ்சளே. Or the way he de-ornaments the intentions behind குங்குமம் ஏன் சூடினேன் / கூரைப்பட்டு ஏன் உடுத்தினேன் / மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு.

If you get past the brilliant opening lines of பூங்காற்றிலே உன் சுவாசத்தை (which Gulzar found impossible to say in such short space, I hear), you get வானம் எங்கும் உன் பிம்பம் / ஆனால் கையில் சேரவில்லை. Not an unusual scene for the mind, yet the way you pack it in a tune. காற்றின் அலைவரிசை கேட்கிறதா என்ற கேள்வி வானொலியில் காதலியைத் தேடுகிற காட்சிக்கு சம்பிரதாயமானது எனினும் அது தனித்து நின்றும் தரும் அழகு. One of his old thoughts ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே is beautifully refined as கண்ணில் ஒரு வலி இருந்தால் / கனவுகள் வருவதில்லை.


Though he succumbs to his pet idea of making the entire lyrics as an extended idea and thus tiring, like கண்ணுக்கு மை அழகு or குளிச்சா குத்தாலம், என்னுயிரே என்னுயிரே provides some lovely lines. கண்கள் தாண்டிப் போகாதே holds a dream inside it, என் உடல் வழி அமிர்தம் வழிகிறதோ is suggestive but என் உயிர் மட்டும் புதுவித வலி கண்டதோ makes the pain absolute. And climax-ing it with மரணம் தான் ஏழுநிலை.

The way he desicively and simply puts it , ஒரு பெண்ணில் மோகம் உண்டு / அதில் பருவத்தாபம் உண்டு / பேராசைத் தீயும் உண்டு / ஏன் உன்னை ஒளித்தாய் இன்று. The butterfly dreams, கண்ணைச் சுற்றும் கனவு.

Or just the pleasure of singing சந்தோஷக் கண்ணீரே, two carefully chosen lovely words together. The best that a lyricist could provide you.

Reply · Report Post